அரியலூர் மாவட்டம் செந்துறையில் புறவழிச்சாலையை விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் விவசாய நிலங்களை வைத்துதான் தங்களது வாழ்க்கை நடத்துவதாகவும், தங்களது விவசாய நிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்க கூடாது, அருகில் உள்ள புறம்போக்கு நிலங்கள் வழியாக அமைத்துக்கொள்ளலாம் என மனு அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.