அரியலூர் கோதண்டராமசாமி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபத சொர்க்கவாசல் கதவுதிறந்து சீனிவாசப்பெருமாள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு கோதண்டராமசாமி கோவிலில் பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சீனிவாசப்பெருமாள் தசவதார மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து பெருமாளுக்கு மகாதீபாராதனை நடைபெற்று நம்மாள்வாருக்கு எம்பெருமாள் காட்சியளித்து மேட்சம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்பின்னர் சீனிவாசப்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நூற்றுகணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று நாமகோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர். இதனையடுத்து பொதுமக்களும் சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனின் அருளை பெற்றனர். இதன்பின்னர் நம்மாழ்வாருடன், சீனிவாசப்பெருமாள் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.