அரியலூர் மாவட்டத்தில் கரும்பு பயிருக்கு வானிலை பயிர் காப்பீடு செயல்பாட்டில் உள்ளது. இதில் நிலத்துக்குரிய தாலுக்கா அளவில் அதிகப்படியான மழை மற்றும் வெப்பநிலை ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு வழங்கப்படும். பயிரின் மகசூல் பாதிப்பு, பூச்சியினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வேறு காரணத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்று காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.