போலியாக நகை அடகு கடை பல லட்சம் மோசடி செய்த நபர் கைது.

76பார்த்தது
போலியாக நகை அடகு கடை நடத்தி குறைவான வட்டி என்று கூறி 100-க்கும் மேற்ப்பட்டவர்களிடம் நகையை திருப்பி தராமல் பல லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபர் கைது.

அரியலூர் மாவட்டம் செந்துறை இந்திரா. (47/25) க/பெ கதிர்வேல் ஆவார். தனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு செந்துறைக்கு சென்றுள்ளார்.

அங்கு குழுமூரை சேர்ந்த ராமு (32) என்பவர் தான் செந்துறையில் ஸ்ரீகணபதி என்ற அடகு கடை நடத்தி வருவதாகவும், மற்ற கடையை விட குறைவான வட்டியில் பணம் தருவதாகவும் கூறியதால், தனது 9 1/2 பவுன் நகைகளை வெவ்வேறு தேதியில் அடமானம் வைத்துள்ளார்.

இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்க அசல் மற்றும் வட்டியுடன் கடந்த ஆண்டு சென்று பார்த்த போது கடை மூடப்பட்டு இருந்தது. இதனால் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது மேற்படி ராமு பல பேரிடம் அடகுக்கு நகைகளை வாங்கி மோசடி செய்து ஏமாற்றி விட்டு தலை மறைவாகவிட்டதாக தெரிந்தது.

இதனையடுத்து, இந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

ராமு அரசு அனுமதி பெறாமல் போலியாக நகை அடகு கடை நடத்தியதும், இதுபோல பலரை நம்ப வைத்து நகைகளை மோசடி செய்ததும் தெரிய வந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி