அரியலூர் மாவட்டம் ஆதனகுறிச்சி ஊராட்சியில் உள்ள முதுகுளம் ஆதிதிராவிடர் தெரு பேருந்து நிறுத்தம் அருகே புதிய பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, கோட்டாட்சியர், வட்டாட்சியர், வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.