அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில். இக்கோவில் திருவிழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஏகாந்த சேவை நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதியின் பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்து வருகின்றனர்