போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் 83 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் நிதி உதவி 18. 6 லட்சம் மதிப்பில் புதுத்தேர் செய்யப்பட்டு இன்று வெள்ளோட்டம் நடத்தப்படுகிறது. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையில் நேற்று முன்தினம் 3000 குடமுழுக்கு திருவிழாக்கள் நடைபெற்று உள்ளது. கடந்த கால ஆட்சிக்காலத்தில் இது போன்று செயல்படவில்லை. அரியலூரில் 82 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் ஒப்பில்லாத அம்மன் கோவில் தேரோட்டமும் இன்று பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் கலைஞர் கருணாநிதியால் ஆழித்தேர் எப்படி ஓட்டப்பட்டதோ அது போன்று தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறையால் அதிக அளவில் கும்பாபிஷேகம் மற்றும் தேரோட்டங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது என்று கூறினார்.