சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.