அரியலூர்: ஹனுமன் ஜெயந்தி விழா

80பார்த்தது
அரியலூர் அருகே உள்ள 6 அடி உயரமுள்ள ராமபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சயாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், தாமரைகுளத்தில் சுமார் 6அடி உயரமாக அமைந்துள்ள ராமபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அனுமன் பிறந்த மூல நட்சத்தில் பிறந்த நாளான நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனுமனுக்கு சிகக்காய், பால், தயிர், இளநீர், பழச்சாறு, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வெற்றிலை மாலை, வாழைப்பழ மாலை, வட மாலை உள்ளிட்டவைகாளல் அலங்காரம் செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க அனுமனுக்கு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்ப்பட்ட பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி