அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். பல்வேறு துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு சாலை வசதி வேண்டியும், வீட்டுமனை வேண்டியும் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.