மேலராமநல்லூரில் அரசு செயலாளர் அருண் ராய் ஆய்வு செய்தார்

72பார்த்தது
மேலராமநல்லூரில் அரசு செயலாளர் அருண் ராய் ஆய்வு செய்தார்
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையில் தீவுபோல் அமைந்துள்ள மேலராமநல்லூர் மற்றும் கீழ ராமநல்லூர் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள காவல் துறையினர் கண்காணிப்பு பணிகள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் பாதுகாப்பு பணிகள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு , எச்சரிக்கை பலகைகள் , மணல் மூட்டைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் மேலராமநல்லூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அருண் ராய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தொடர்புடைய செய்தி