அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த கண்டிராதீர்த்தம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அர்ஜுன்ராஜ், வயது (34). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர், 09. 9. 2023-ந்தேதி ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டு, திருமானூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் வெளியே வந்தால் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடும் என்பதால் குற்றவாளி அர்ஜுன்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனிமேரி ஸ்வர்ணா, குற்றவாளி அர்ஜுன்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆணைப் பிரதிகள் திருச்சி மத்திய சிறையில் வழங்கப்பட்டன.