அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் மேலப்பழூர் ஊராட்சி சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் அஜிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி மேலப்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். டாக்டர் முபாரக் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை வழங்கினார். முகாமில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை ஸ்கேன் மற்றும் இருதய சுருள் பரிசோதனை உட்பட அனைத்து விதமான சிகிச்சை மற்றும் தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல், பள்ளி தலைமை ஆசிரியர் சரவணராஜா மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். திருமானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி அசோகச் சக்கரவர்த்தி மேற்பார்வையிட்டார். கீழப்பலூர் வெங்கனூர் மற்றும் திருமானூர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் 1145 பேர் கலந்து கொண்டு உடல்நல பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில் 420 பேருக்கு ரத்தம் மட்டும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 15 பேருக்கு இசிஜி எடுக்கப்பட்டது.