அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்சுற்றியுள்ள கிராம பகுதியில் இன்று (பிப். 05) காலை 7. 00 மணியளவில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், காலையில் வாகனங்களில் வேலைக்கு செல்ல முடியாமலும் மற்றும் குளிர் காற்றுடன் இந்த பனி பொழிவு இருந்ததனால் மக்கள் காலையில் தங்களது அன்றாட வேலைகளை செய்ய இயலாது பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.