அரியலூர்தனியார்கல்வி குழுமத்தின்சார்பில்சமத்துவ பொங்கல்விழா

58பார்த்தது
அரியலூர்- தனியார் கல்வி குழுமத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமத்தில் மாடர்ன் கல்வி குழுமம் இயங்கி வருகிறது. இந்த கல்வி குடும்பத்தின் சார்பில் பி. எம் பப்ளிக் பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளி மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டனர். இதனைத் தொடர்ந்து மாடர்ன் கல்வியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வேட்டி சேலை என பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் செங்கரும்பு வைத்து கும்மியடித்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறி உற்சாகமாக கொண்டாடினர்.


இதனை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து ஆடல் பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினார். இதில் பள்ளி கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாடர்ன் கல்வி குடும்பத்தின் சார்பாக செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி