மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

65பார்த்தது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் 56 வது பிறந்த நாளை முன்னிட்டு செந்துறை நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சரும், திமுக அரியலூர் மாவட்ட கழகச் செயலாளருமான சா. சி. சிவசங்கரின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. செந்துறை ஒன்றிய திமுக சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் ஆகியோர் பொன்பரப்பி பாலாஜி மஹாலில் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பிறந்தநாள் விழா கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது மேலும் பிறந்த நாளை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது. ஒன்பது வயதிற்கு உட்பட்டவர்கள் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் திறந்த வகை என நான்கு வகையாக நடத்தப்பட்ட போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் அமைச்சர் சிவசங்கரின் 56 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூண்டுடன் கூடிய 56 மரக்கன்றுகள் கழக நிர்வாகிகளால் நடப்பட்டது. இவ்விழாவில் திமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் முதல்வர் உருவம் பொறித்த டீ சர்ட் தொப்பிகள் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி