அரியலூர் ஆட்சியர் கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கினர். இதில் மாவட்ட ஆட்சியரத்தில் சாமி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.