விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

54பார்த்தது
விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை தாங்கினார் அரியலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் கொள்ளிடம் ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் புள்ளம்பாடி வாய்க்காலில் கண்டிரா திருத்தம் ஏரியில் இருந்து சுக்கிரன் ஏரி வரை வரத்து வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் கொள்ளிடம் கரையை பலப்படுத்தி போக்குவரத்திற்கு ஏதுவாக பலப்படுத்த வேண்டும் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களில் விதை உரம் ஆகியவற்றை போதிய அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும் இயற்கை உரங்களை கூட்டுறவு விற்பனை மையங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்

தொடர்புடைய செய்தி