மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
அரியலூர் - நீர் நிலைகளில் கட்டப்பட்டிருப்பதாக கூறி ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிக்க உத்தரவிடும் நீதிமன்றம் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை இடிக்க உத்தரவிடுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் கேள்வி எழுப்பினார்

அரியலூர் அண்ணா சிலை அருகில் நாகமங்கலம் கிராமத்தில் காமராஜர் நகர் காஞ்சிலிகொட்டாய் பகுதியில் நீர்நிலைகளில் வீடு கட்டி குடியிருப்பதாக கூறி வீடுகளை இடிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்கள் நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப்பதாக கூறி அவர்களின் வீடுகளை இடிக்க முற்படும் வருவாய்த் துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது இதனை வாபஸ் பெற வேண்டும் தொடர்ந்து அப்பகுதியிலேயே அவர்கள் குடியிருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி