அரியலூர் மாவட்டத்தில் கரகாட்ட கலைக்குழுவினர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு அனுமதி கிடையாது என்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர் இவர்களது வாழ்வாதாரம் கோவில்களில் நடனமாடி பிழைப்பு நடத்துவது என்றும் தற்பொழுது ஆடி மாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பல்வேறு கோவில்களில் நடன நிகழ்ச்சி நடைபெறும் ஆகையால் கரகாட்டக்காரர்கள் அனைத்து மாவட்டங்களிலும் கரகாட்டத்திற்கு அனுமதி வழங்கி வருகின்றனர் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கரகாட்டம் ஆடுவதற்கு அனுமதி இல்லை என்றும் இதனை உடனடியாக வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.