டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

4140பார்த்தது
டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம் விளாங்குடி தா. பழூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 65). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே வசித்து வரும் சிவக்குமார் (42), விளாங்குடி கொலையனூர் பகுதியை சேர்ந்த இவரது அக்காள் மகன் ஸ்டாலின் (29) ஆகியோர் மதுபோதையில் பாலசுப்பிரமணியத்தை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், ஸ்டாலின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி