அணைக்கரையில் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

1034பார்த்தது
தஞ்சாவூர்-கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை செல்ல அணைக்கரை பாலம் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்லையில் அணைக்கரை பாலத்தில் ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் வகையில் இருப்பதால் செக் போஸ்ட் காவலர்கள் வாகனங்களை போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை அனுமதித்து வந்தனர்.

ஆனால் செக்போஸ்ட் காவலர்களின் அலட்சியத்தால் அணைக்கரை பாலத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு வடவாறு தலைப்பு செக்போஸ்ட் வரையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. முறையாக செக்போஸ்ட் காவலர்கள் செயல்பட்டு போக்குவரத்தை அனுமதித்து இருந்தால் இவ்வகையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்காது என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இன்று முகூர்த்த நாளாக இருப்பதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்துள்ளது நீண்ட நேரம் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அவசர தேவைக்காக செல்லும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செக் போஸ்ட் காவலர்கள் வாகன நெரிசலை ஒழுங்கு படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வாகனங்களை படிப்படியாக அனுப்பி வருகின்றனர்.