அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள தி/ள். டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் 2. 25. 0 ஹெக்டேர், புல எண். 455/1, 456/2 & 456/3 கயர்லாபாத் கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தி/ள். லால்குடியார் திருமண மண்டபம், அரியலூர் மெயின் ரோடு, கல்லங்குறிச்சி கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 23. 05. 2023 அன்று காலை 11. 00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பொதுமக்கள் கேட்டுணரும் கூட்டத்தில் பங்கேற்கலாம். மேலும் மேற்கண்ட தொழிற்திட்டங்களைப்பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டடு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பெ. ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.