அரியலூர் காமராஜர் சிலை அருகில்
காங்கிரஸ் கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட
காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது
பாஜக தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகவும் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.