அரியலூர் மாவட்டம் அரியலூர் தலைநகரில் அண்ணா சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முதல்வர் தேர்தல் வாக்குறுதியின்படி ஒவ்வொரு மாதமும் மின் கட்டண அளவீட்டு முறையை செயல்படுத்த வேண்டும் என்றும் மின் கட்டண உயர்வை உடனே குறைக்க வேண்டும் என்றும் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.