மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது. கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. அதனடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து நீர்வளத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேவையான இடங்களில் மணல் மற்றும் சவுக்கு மரங்களை தயார் நிலையில் வைத்திடவும், வருவாய்த் துறையினர் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் தீயணைப்புத்துறை, காவல் துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திடவும் அறிவுறுத்தப்பட்டது.