ஆண்டிமடம் வட்டாரத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தார். அப்போது குவாகம் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டறிந்து, அதற்கான ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்