அரியலூர் மாவட்டம், அரியலூர் அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளுக்கான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன. அப்பொழுது கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டு குழுவாக பிரிந்த குழந்தைகள் ஆர்வமுடன் கயிறு இழுத்து தங்களது திறமையை வெளிப்படுத்தினார். இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.