குடற்புழு நீக்க மாத்திரை, நாப்கின்கள் வழங்கும் முகாம்

72பார்த்தது
குடற்புழு நீக்க மாத்திரை, நாப்கின்கள் வழங்கும் முகாம்
குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கும் முகாம்
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 05. 09. 2024 அன்று நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் மாணவிகளுக்கு சுகாதாரம் பேணுவதற்காக நாப்கின்கள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் காலை 11. 00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்(மு. கூ. பொ) முனைவர் பெ. இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயின்று வரும் 3300 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் 1900 பேருக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் வெ. கருணாகரன்(அலகு-1), முனைவர் கோ. பன்னீர்செல்வம்(அலகு-2) மற்றும் முனைவர் அ. மேரி வயலட் கிருஸ்டி(அலகு-3) ஆகியோர் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி