திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் மன்றத்தில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பொறியா ளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் தலைவர் பிரசன்ன வெங்கடேசன் தலைமை வகித்தார்.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, அஸ்தினாபுரம் மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை குணபாளினி, ஸ்வீட் டிரஸ்டு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் இளவரசன் ஆகியோருக்கு தென்னிந்திய சி. எஸ். ஆர் தலைவர் முகமது ரஃபி
கல்வி ஞானசுடர் விருது வழங்கினார். பொறியாளர்களுக்கான விருதை இமையவரம்பன் வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு
பலரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர். முகமது ஷபி வரவேற்றார். ரெங்கராஜன் நன்றி கூறினார்.