அரியலூர் ஆசிரியர் இளம்பெண்ணுடன் உல்லாசம் - கொன்று வீச்சு!

2251பார்த்தது
அரியலூர் ஆசிரியர் இளம்பெண்ணுடன் உல்லாசம் - கொன்று வீச்சு!
கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த விக்டர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த விக்டர் மே 18ம் தேதி வெளியில் சென்றிருக்கிறார். அதன் பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து விக்டரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரை தேடியும் கிடைக்காததால், விக்டரின் தாய் பாத்திமாமேரி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விக்டர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 21 வயது பட்டதாரி இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது.

இதனிடையே ஜனனி மற்றும் அவரது அண்ணன் முறை உறவினரான தட்சிணாமூர்த்தி ஆகியோர் விக்டரை கொலை செய்ததாக திருப்பாதிரிப்புலியூர் விஏஓவிடம் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஆசிரியர் விக்டர் திருமணமாகாத இளம்பெண் ஜனனியுன் தகாத உறவு வைத்திருந்தார். அவ்வபோது ஜனனிக்கு பண உதவியும் செய்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே ஜனனிக்கு திருமணம் ஏற்பாடு நடக்கவே, கோபமான விக்டர் பிரச்னை செய்து இருவரின் உறவு குறித்து வெளியில் கூறுவேன என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ஜனனி, அதனை தட்சிணாமூர்த்தியுடன் தெரிவித்திருக்கிறார். அவரும் விக்டரை பல முறை கண்டித்திருக்கிறார். ஆனால், அவர் அந்த பெண்ணுடன் இருந்த பழக்கத்தை விடவில்லை. மே 18-ம் தேதி விக்டரை தாக்கியதில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி அதை பைக்கில் எடுத்து சென்று நெய்வேலி டவுன்ஷிப் தீயணைப்புதுறை அலுவலகத்துக்கு பின்புறத்தில் வீசியுள்ளனர்.

இதையடுத்து போலீஸார் பார்த்தபோது அந்த இடத்தில் எலும்புக் கூடு இருந்தது. போலீஸார் எலும்புகூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் அந்த பெண்ணை போலீஸார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி