பக்ரீத் நாளன்று நுழைவுத் தேர்வு நடத்தும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என பாபநாசம் தொகுதி எம். எல். ஏ ஜவாஹிருல்லா தெரிவித்தார். மாணவர்கள் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடும் உரிமையை மதிக்க வேண்டும் என்றும், தேர்வு தேதி மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தேர்வு நாட்கள் மக்கள் மத நம்பிக்கைகளை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை