உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதில் வாகன பயன்பாட்டிற்கு பதிலாக பொது போக்குவரத்து மற்றும் சைக்கிள்களை பயன்படுத்துவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் மரங்களை வளர்ப்போம், என மூத்த மருத்துவர் ரமேஷ் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.