அரியலூர் பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி (வீடியோ)

12114பார்த்தது
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாத்தமங்கலத்தில் தனியார் வெடி தயாரிக்கும் சிறிய தொழிற்கூடம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை அத்தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஆலையில் இருந்த பட்டாசுகள் மளமளவென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட 3 பேர் இதுவரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட எஸ். பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தீயணைப்புத் துறையினர் ஆலையில் உள்ள தீ விபத்தை கடும் முயற்சி செய்து அனைத்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அறிவியல் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி