அரியலூர்: மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கிய கலெக்டர்

59பார்த்தது
அரியலூர்: மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கிய கலெக்டர்
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி, ஈ. வே. இரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இணை விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி, இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 672 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான இணை விலையில்லா சீருடைகள் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இன்றைய தினம் 672 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியை சேர்ந்த 47, 034 மாணக்கர்களுக்கு இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜ மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜா, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி