பழமை வாய்ந்த சுவாமி சிலைகள் திருட்டு

83பார்த்தது
அரியலூர் அரியலூர் மாவட்டம் மேலப்பலூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருட்டு போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் 1400 ஆண்டுகள் பழமையான, இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் ஆகும். இக்கோவிலின் அர்ச்சகர் முருகானந்தம் நேற்று பூஜையை முடித்து கதவுகளை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று அர்ச்சகர் முருகானந்தம் காலை பூஜைக்காக கோவிலுக்கு வந்த பொழுது கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோவிலில் உள்ளே சென்று பார்த்த போது, சுவாமி மற்றும் அம்பாள் சிலைகளும், சிவன் மேல் வைக்கப்படும்
நாகாபரணம் , தொங்கு சரவிளக்கு, பூஜை பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. அர்ச்சகர் கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் உள்ளே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி