கருணை இல்லத்தில் உதவி செய்த அதிமுகவினர்

1876பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விளாங்குடியில் செயல்படும் தனியார் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட விவசாய அணி பிரிவு சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் நல்லமுத்து வரவேற்றார். மாவட்ட விவசாய அணி பிரிவு மாவட்ட செயலாளர் சிவகுண சேகரன் தலைமை தாங்கினார்.

முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட கழக செயலாளருமான தாமரை. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்ற பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜீவா அரங்கநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசங்கர், அரியலூர் ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலு விவசாய அணி துணை செயலாளர்கள் அழகர், மலர்மன்னன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி