அரியலூர் - தா. பழூரில் பல்லவர் கால பழமை வாய்ந்த, கோவில் யாகசாலையில் மண்டியிட்டு வணங்கிய குட்டை பசு. *
*பசுவை தொட்டு வணங்கிய பக்தர்கள். *
அரியலூர் மாவட்டம் திதி தோஷ பரிகார ஸ்தலமான பல்லவர் கால பழமை வாய்ந்த தா. பழூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு விஸ்வநாத ஸ்வாமி திருக்கோவில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆயிரத்துக்கும் அதிகமான வருடங்கள் பழமையான கோவிலான அருள்மிகு விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பக்தர்கள் இணைந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து திட்டமிட்டனர்.
கடந்த ஒரு வருடங்களாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நாளை 7. 7. 2025 அன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கடந்த 2. 7. 2025 புதன்கிழமை அன்று காலை அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம், தனபூஜை, கலசாபிஷேகம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் கோபூஜை நடைபெற்றது இதற்கு குட்டை பசு வரவழைக்கப்பட்டு அதற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்தனர். அப்பொழுது யாகசாலையில் உள்ள சிவன் கலசத்திற்கு குட்டை பசு மண்டியிட்டு வணங்கியது. இந்த செயல் அங்கு கூடியிருந்த பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.