அரியலூரில் இந்திய தொழிற்சங்க சிஐடியுசி மறியல் போரட்டம் 34 பேர் கைது
அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தொழிற்சங்க உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சாம்சங் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் தொழிற்சங்கத்தை ஏற்க மறுக்கும் சாம்சங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டப்படி போராட்டம் நடத்தும் தொழிலாளர்களையும் அவர்களுக்கு தலைமை தாங்கும் சிஐடியு தலைவர்களையும் கைது செய்து அடக்கு முறையை ஏவும் காவல்துறையை கண்டித்தும், சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்து என தமிழக அரசை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.