அரியலூர் அருகே ஏலேறி கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அருள் செல்வன் மற்றும் பழனிச்சாமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் அருள் செல்வனுக்கு 30 ஆண்டுகள் சிறையும், பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.