அரியலூர் மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் வருகின்ற 10. 8. 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல் பட்ட பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 50% அதிகபட்ச நிதி உதவியாக ஒரு லட்சம் பின்னேர்ப்பு மூலதன மாரனியமாக வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் மானிய உதவித்தொகை பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் 21 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும் வேளாண்மை தோட்டக்கலை வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்