பால் மற்றும் பனீர் சைவம் இல்லை என்று ஜன்னல் ஷாப் மெடிக்கல் எத்திக்ஸ் ஆசிரியரான டாக்டர் சில்வியா கற்பகம் பதிவிட்டுள்ளார். பால் மற்றும் பனீர் ஆகியவை விலங்குகளின் மூலங்களில் இருந்து வருகின்றன. எனவே இவற்றை நாம் சைவ உணவாக கருத முடியாது. கோழி, மீன், மாட்டிறைச்சி போல இவையும் அசைவ உணவாகும் என அவர் கூறியுள்ளார். ஆனால் சிலர் பாலும், பனீரும் விலங்குகளை கொல்லாமல் கிடைப்பதால் அவற்றை அசைவ உணவாக கருத முடியாது என எதிர் விவாதம் வைக்கின்றனர்.