சிபிஐ அதிகாரிகள் போல் உங்களை வாட்ஸப்பில் தொடர்புகொண்டு உங்கள் பெண் எங்களுடைய கஸ்டடியில் இருக்கிறாள். அவளை மீட்க வேண்டும் என்றால் உங்களது ஆதார், பான், வங்கி கணக்கு எண்ணை கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நம்பி வங்கி கணக்கு எண்ணை கொடுத்தால் உடனடியாக உங்களது பணம் திருடுபோய்விடும் எச்சரிக்கையாக இருங்கள் என கூறியுள்ளனர்.