விரதம் இருப்பவர்களுக்கு அதன் கஷ்டம் தெரியாமல் இருக்க ஒரு எளிய டிப்ஸ் உள்ளது. விரதம் இருக்கும் பொழுது வாயில் ஒரு மலை நெல்லிக்காயை வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்கும் சமயத்தில் செரிமானத்திற்கான நொதிகள் அதிகமாக உருவாகி வாந்தி உணர்வுகள் ஏற்படும். எனவே அந்த சமயத்தில் உங்கள் உடலுக்குள் ஒரு புளிப்பை சேர்த்தால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. விரதம் இருக்கும் நாட்கள் மட்டுமல்லாமல், பசிக்கும் சமயத்திலும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.