மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை காரணமாக, தமிழ்நாட்டில் திமுகவினர் பதற்றத்தில் இருப்பதாக பாஜகவினரால் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து திமுக அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயல்திட்டங்களை பார்த்து பாஜகவினர் தான் பயத்தில் இருக்கின்றனர். நாங்கள் எதற்கு பயத்தில் இருக்க வேண்டும்?" என கூறினார்.