தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை கைது செய்யும் போலீஸ், குற்றவாளிகள் கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறி மாவு கட்டு போடுகின்றனர். இதற்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “தமிழக காவல் நிலைய கழிப்பறைகள் கைதானோருக்கு மட்டும் வழுக்குமா?. அதே கழிவறையை பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு மட்டும் ஏன் வழுக்குவதில்லை?. கைதானவர்கள் வழுக்கி விழுந்து கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என எச்சரித்தனர்.