உங்கள் மொபைலில் Screen Time Limit இருக்கும் அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம், குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் உபயோகித்தால் தானாகவே லாக் ஆகி விடும். உங்கள் மொபைலில் பல ஆப்ஸ்கள் இருந்தால், உங்கள் குழந்தைக்கு தேவையில்லாத ஆப்ஸை லாக் செய்யுங்கள். குழந்தைகள் யூடியூபில் விடியோக்கள் பார்க்க ஆசைப்பட்டால் யூடியூப் கிட்ஸ் என்ற அம்சத்தை ஆன் செய்வதன் மூலம் வேறு வீடியோக்கள் பார்ப்பதை தடுக்க முடியும். செல்போன் பார்க்கும் குழந்தைகளை இருட்டில் வைத்து பார்க்க அனுமதிக்காதீர்கள்.