கல்வி உள்கட்டமையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் 28 நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஒரு பள்ளிக்கு 960 மாணவர்கள் என்ற வீதம் சுமார் 82,560 மாணவர்கள் பயனடைவார்கள். மேலும், ஒரு பள்ளிக்கு 33 பணியிடங்கள் என்ற வீதம் மொத்தம் 5,388 பேருக்கு மத்திய அரசின் கீழ் வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.