பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்டது. இதன்மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.