மகளிர் உரிமைத் தொகை பெற நாளை (ஜூலை 7) முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக வினியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்த பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.